Where is my Angel (எங்கே எனது தேவதை)
துபாயில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான ஜ்யோத்சனா, இஞ்சினியராக வேலைக்கு வருகிற தன் தமையனின் நண்பனான சிபியை விரும்புகிறாள். அத்வைதும், தங்கையின் தோழியான சஞ்சனாவை நேசிக்கிறான். இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். கோடை விடுமுறையில் குடும்பத்தோடு இந்தியா செல்கிற ஜோ ரயில் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறாள். அவளின் மறைவுக்கு பின் ஜ்யோத்சனாவின் குடும்பத்தாரும், சிபியின் குடும்பத்தாரும் மொத்தமாக உடைந்து போகிறார்கள். சிபி வாழ்க்கையே சந்தோஷமின்றி வறண்டு போகிறது. திடீரென்று ஒரு நாள் சிங்கப்பூரிலிருந்து சஞ்சனாவுக்கு அழைப்பு வருகிறது அங்கு ஜ்யோத்சனா இருக்கிறாள் என்று. யார் போன் செய்தது? சிங்கப்பூரில் இருந்தது ஜோ தானா? சிபியின் வாழ்க்கை என்னானது? இரு குடும்பங்களும் ஜோவை இழந்த சோகத்திலிருந்து மீண்டார்களா? என்பதே மீதி கதை. துபாயில் ஆரம்பித்து, இந்தியா சென்று , அங்கிருந்து சிங்கப்பூர் பயணித்து மீண்டும் இந்தியாவில் நிறைவடையும் அழகான காதல் கதை.