Yaadra (Tamil Edition)
யாத்ராவை இவ்வளவு நெருக்கத்தில் முதல் முறை பார்க்கின்றாள்...
அவனோ அவளை திரும்பி கூட பார்க்கவில்லை...
தொடர்ச்சியான அலைபேசி அழைப்புகள்... பேசிக் கொண்டே வந்தான்...
ஒரு கட்டத்தில், "அவன் தலையை வெட்டிடு... அவன் லாம் உசுரோட இருக்கவே அருகதை இல்ல" என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆடலரசியோ, "கசாப்பு கடைக் காரன் போலவே பேசுறான்... ச்ச" என்று முணு முணுத்துக் கொண்டாள்... கோபத்தில் பேசுகின்றான் என்று தான் நினைத்து இருந்தாள் தவிர, அந்த வார்த்தைகளில் உண்மை இருக்கும் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை...
சற்று நேரத்தில் அவர்களின் வண்டி ஒரு குடோனில் வந்து நின்றது... கண்ணாடியூடு பார்த்தாள்...
"இது என்ன இடம்?" என்று அவள் யோசிக்க, "இறங்கு" என்று சொல்லிக் கொண்டே யாத்ரா இறங்க, அவளும் இறங்கினாள்...
அவனோ நடந்து கொண்டே, "முன்ன பின்ன போட்டு பார்த்து இருக்கியா?" என்று கேட்டான்...
'முன்ன பின்ன போடுறதா? எதன்னு தெரியலையே, ட்ரெஸ்ஸா இருக்குமோ? நான் ட்ரெஸ் போட்டு தானே இருக்கேன்... ஏதாவது படமா இருக்குமோ?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அவள் நடக்க, "கேக்கிறேன் ல" என்றான் அவன் அதட்டலாக அவளை பார்க்காமல் நடந்து கொண்டே...
"எந்த படம்னு சொன்னீங்கன்னா, போட்டு பார்த்து இருக்கேனா? இல்லையான்னு சொல்லிடுவேன்" என்றாள்...